சேலம்

சேலத்தில் விடிய விடிய நடைபெற்ற ஐயப்பன் திருவீதி உலா

6th Dec 2022 11:54 AM

ADVERTISEMENT

 

சேலம்: சேலத்தில் ஐயப்பன்  திருவீதி உலா விடிய விடிய நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் விளக்குகள் ஏந்தி ஊர்வலம். கேரள செண்டை மேளம், சிக்காட்டம், மங்கள வாத்தியம், வாண வேடிக்கை முழங்க கொண்டாட்டம் நடைபெற்றது.

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சபரிநாதன் ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க.. கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்: எப்படி கண்டுபிடித்தது காவல்துறை?

ADVERTISEMENT

 

இந்த நிலையில் கார்த்திகை மாதம் 18 ஆம் நாளை முன்னிட்டு ஸ்ரீ சபரிநாதன் ஐயப்பன் திருவீதி உலா நடைபெற்றது.

நள்ளிரவு தொடங்கிய இந்த திரு விதி உலாவில் அந்த பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவிளக்கு தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மேலும் இந்த திருவீதி உலாவில் கேரள செண்டை மேளம், மங்கள வாத்தியம், பம்பை சிக்காட்டம், டிரம்ஸ், தாரை ஓசை ஒலிக்க வாண வேடிக்கை நடைபெற்றது.

பெண்கள் விளக்கு ஏந்தி விடிய விடிய பல்வேறு பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்று, கோயிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த திருவிதி உலாவால் அந்தப் பகுதியே விழாக் கோலம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT