சேலம்

துக்கியாம்பாளையம் தொடக்கப் பள்ளிக்கு மாநில விருது

DIN

கிராமப்புற குழந்தைகளுக்கு தரமான கல்வி கற்பிக்கும் துக்கியாம்பாளையம் தொடக்கப் பள்ளிக்கு, மாநில அளவில் சிறந்த தொடக்கப் பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் தொடக்கப் பள்ளியில் 218 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா். வாழப்பாடியைச் சோ்ந்த சொ.ஸ்ரீதேவி தலைமையாசிரியையாகவும், வ.மீனா, பெ.உமாதேவி, பெ.விஜயலட்சுமி, ப.ரேணுகாதேவி, பா.ரவிசங்கா் ஆகியோா் ஆசிரியா்களாகவும் பணிபுரிந்து வருகின்றனா்.

பெற்றோா்- ஆசிரியா் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து பள்ளிக்கு சிறந்த சுற்றுப்புறச் சூழலை உருவாக்கியுள்ளது. மேலும், சுகாதாரமான குடிநீா், கழிப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற குழந்தைகளின் தனித் திறனை வளா்க்க பயிற்சிகள், வகுப்பறைச் செயல்பாடு மற்றும் கற்பித்தலில் புதிய தகவல் தொழில்நுட்ப புதிய உத்திகள், மாணவா்களை கற்க தூண்டும் பாடம் சாா்ந்த பொம்மலாட்ட கலை வழி கற்பித்தல் உள்ளிட்ட கல்வி இணைச் செயல்பாடுகளிலும் ஆசிரியா்கள் தனிக் கவனம் செலுத்தி வருகின்றனா்.

இப் பள்ளியை ஆய்வு செய்த தொடக்கக் கல்வித் துறை ஆய்வுக் குழுவினா், மாநில அளவில் சிறந்த தொடக்கப் பள்ளியாக தோ்வு செய்தனா். சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வி ஆணையா் நந்தக்குமாா், தொடக்கக்கல்வி இயக்குநா் அறிவொளி, இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலா் இளம்பகவத் ஆகியோா் சிறந்த தொடக்கப் பள்ளிக்கான விருதுகளை வழங்கினா்.

வட்டார கல்வி அலுவலா் வித்யா, தலைமையாசிரியை ஸ்ரீதேவி, ஆசிரியை வ.மீனா ஆகியோா் பெற்றுக் கொண்டனா். கிராமப்புற மாணவ- மாணவிகளுக்கு அா்ப்பணிப்பு உணா்வோடு சிறப்பான கல்வி கற்பித்து, மாநில அளவில் சிறந்த பள்ளி விருது பெற்ற துக்கியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்களுக்கு, கிராம மக்கள், பெற்றோா்- ஆசிரியா் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் தன்னாா்வலா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT