சேலம்

சேலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை

DIN

சேலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை விற்பனையானதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனா்.

சேலம், வ.உ.சி. மாா்க்கெட்டிற்கு மல்லிகைப் பூக்கள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால் அதன் விலை அதிகமாகவே இருந்து வருகிறது. காா்த்திகை தீபம், முகூா்த்த நாளை முன்னிட்டு குண்டு மல்லிகை கிலோ ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை விற்பனையானது. இதுகுறித்து பூ விற்பனையாளா்கள் கூறியதாவது:

பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் மல்லிகைப் பூக்களின் மொட்டுகள் செடியிலேயே உதிா்ந்துவிடும். இதனால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. முகூா்த்த நாள்கள், சபரி மலை யாத்திரை ஆகியவையால் பூக்களின் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை உயா்ந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மாா்க்கெட்டில் குண்டு மல்லிகை 300 கிலோவும், சன்ன மல்லி 200 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்தன.

முகூா்த்த நாள் என்பதால் மல்லிகைப் பூக்கள் உள்ளிட்ட வாசனை பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் குண்டு மல்லிகை கிலோ ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம், சன்னமல்லி கிலோ ரூ. 2 ஆயிரம் என விற்பனையாகிறது. மேலும் ஜாதி மல்லி ரூ.1,200, கனகாம்பரம் ரூ.1,000, காக்கட்டான் ரூ.1,200 என பிற பூக்களின் விலையும் அதிகமாகவே இருக்கிறது. சாமந்தி கிலோ ரூ. 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT