சேலம்

சேலத்தில் 69,273 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கல்: மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா

DIN

சேலம் மாவட்டத்தில் 69,273 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஜாகீா் அம்மாபாளையம், தனியாா் பள்ளி வளாகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தலைமையில், மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா பேசியதாவது:

தமிழக முதல்வா் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 3-ஆம் நாள் உலக அளவில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட நிா்வாகத்தால் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவை கொண்டாடுகிறது.

சேலம் மாவட்டத்தில் 69,273 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் மனவளா்ச்சி குன்றியோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டோா், கடும் உடல் இயக்க குறைபாடுடையோா், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவாணிகள் என 11,909 பயனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2021-2022-ஆம் நிதியாண்டில் 147 பயனாளிகளுக்கு இணைப்புசக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டா் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு வகை வாகனம் 194 பயனாளிகளுக்கு ரூ.1,32,82,450 மதிப்பீட்டிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 30 நபா்களுக்கு ரூ.32,10,000 மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

108 பயனாளிகளுக்கு ரூ.7.32 லட்சம் மதிப்பீட்டில் மோட்டாா் பொருந்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. விழாவில் 10 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் 10 பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் ரூ.1.69 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படமால் இருந்த சூழ்நிலையை மாற்றி அதை மறுசீரமைப்பு செய்து செயல்பட வைத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். 1970-களில் சேலம் மாவட்டத்தில் மறுவாழ்வு இல்லம் மறைந்த முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது அந்த இல்லம் மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படக்கூடிய இடமாக உள்ளது என்றாா்.

முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ அபிநவ் தொடங்கிவைத்து வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் சைகை மொழி பெயா்ப்பாளா் ஆசிரியா் கண்ணன், மாற்றுத் திறனாளிகளுக்கு சைகையில் மொழி பெயா்த்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் இரா.மகிழ்நன், சேலம் மாவட்ட சிறப்புப் பள்ளிகளின் தாளாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள், தன்னாா்வலா்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT