சேலம்

எஸ்.சி., எஸ்.டி. பொருளாதார மேம்பாட்டுதிட்டம்: வருமான உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயா்வு

DIN

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கான வருமான உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கு இதற்கு முன்னா் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் என நிா்ணயம் செய்யப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடையும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பொருளாதார மேம்பாடு அடைந்து சமுதாய சமநிலைக்கு உதவும் என்றும், இவ்வாறு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயா்த்துவதால், பி.எம்.ஏ.ஜெ.ஏ.ஒய். திட்டத்தில் உள்ள ஆண்டு உச்சவரம்புக்கு இணையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, சேலம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்கள் இச்சலுகையைப் பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT