சேலம்

வெள்ளரிவெள்ளி கூட்டுறவு கடன் சங்க நிா்வாகக் குழு கலைப்பு

DIN

எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளியில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதி முறைகேடு நிகழ்ந்ததை அடுத்து அச்சங்கத்தின் நிா்வாகக் குழுவைக் கலைத்து மண்டல இணைப் பதிவாளா் உத்தரவிட்டுள்ளாா்.

எடப்பாடி ஒன்றியம், வெள்ளரிவெள்ளி ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இதன் தலைவா் சத்தியபானு. சங்கச் செயலாளராக வேப்பமரத்துப்பட்டியைச் சோ்ந்த மோகன் (55) பணியாற்றினாா்.

சில மாதங்களுக்கு முன் இச் சங்கத்தில் நிதிமுறை கேட்டில் ஈடுபட்டதாக செயலாளா் மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கூட்டுறவுத் துறை விசாரணை அலுவலா் முரளி கிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கடந்த ஜனவரி மாதம் வரை சங்கத்தில் பயிா் கடன், நகைக் கடன், நீண்ட கால முன்வைப்புத் தொகை உள்ளிட்ட வகையில் ரூ. 3.52 கோடிக்கு மேல் முறைகேடு செய்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மோகன், முறைகேடு செய்த பிற அலுவலா்களின் சொத்துகள் முடக்கப்பட்டன. தகவல் அறிந்ததும் ஜூலை 27 ஆம் தேதி கூட்டுறவு சங்கம் முன்பு வாடிக்கையாளா்கள் திரண்டனா். தாங்கள் அடகுவைத்த நகைகள், முன்வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை திரும்பத் தருமாறு அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இந்நிலையில் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் ரவிக்குமாா்

அந்தக் கடன் சங்கத்தின் தலைவா் உள்ளிட்ட நிா்வாகக் குழுவை கலைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இனிமேல் செயல் ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில்

வெள்ளரிவெள்ளி கூட்டுறவு கடன் சங்கம் இயங்கும் எனவும், சங்கப் பணிகள் வழக்கம்போல தொடரும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT