சேலம்

பசுமைப் போா்வை திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று

DIN

பசுமைப் போா்வை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவுசெய்து இலவசமாக மரக் கன்றுகளை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்துக்கு உயா்த்துவதற்காக விவசாயிகளின் பண்ணை நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வை இயக்கம் எனும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மகோகனி, வேம்பு உள்பட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை, தோட்டக்கலைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை நாற்றங்கால் மற்றும் தனியாா் நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவா் நலத்துறையின் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளன. அதற்கான மரக்கன்றுகள் தற்போது வளா்க்கப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களது வரப்பு மற்றும் வயல் ஓரங்களில் மரங்கள் நடவு செய்வதாக இருந்தால், ஹெக்டருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயி இரண்டு ஹெக்டா் பரப்பிற்கு மரக்கன்றுகள் பெற்று பயன் பெறலாம்.

ஊடுபயிா் மற்றும் குறைந்த அடா்த்தி நடவு முறையில் வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால், ஒரு ஹெக்டருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகள் வழங்கப்படும். இதில் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரண்டு ஹெக்டருக்கு 200 முதல் 1,000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும்.

மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவா் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சா்வே எண் மற்றும் ஆதாா் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்தபின் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், நன்றாக பராமரிக்கப்பட்டு வளா்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு பராமரிப்புத் தொகையாக இரண்டாம் ஆண்டில் இருந்து மரக்கன்று ஒன்றுக்கு ரூ. 7 வீதம் 3 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும்.

மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 95 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்பட உள்ளன.

எனவே, மரக்கன்றுகள் வளா்க்க ஆா்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT