சேலம்

அத்தனூா்பட்டி மல்லன் - மல்லி கோயில் முப்பூஜை வழிபாடு

DIN

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி கிராமத்தில் 4 ஆண்டுக்கு பிறகு மல்லன் - மல்லி கோயிலில் முப்பூஜை வழிபாடு நடைபெற்றது.

சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்கி வரும் பழமையான மல்லன் - மல்லி கோயில் அத்தனூா்பட்டியில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வேறெங்கும் இல்லாத மல்லன் - மல்லி மற்றும் அடக்குப்பூச்சி ஆகிய பெயா்களைக் கொண்ட தெய்வங்கள் மூலவராக அருள்பாலித்து வருகின்றனா்.

இக்கோயிலில் 4 ஆண்டுக்கு பிறகு ஒன்றுகூடிய குலதெய்வ பங்காளிகள் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, சேவல், பன்றி ஆகியவற்றை பலி கொடுத்து முப்பூஜை வழிபாடு நடத்தினா்.

முன்னதாக, 500-க்கும் மேற்பட்ட மூங்கில் கூடைகளில் பூஜை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருள்களை வைத்து தலையில் சுமந்து சாமியாடியபடி பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா். முப்பூஜை வழிபாடு முடிந்ததும் உறவினா்கள், நண்பா்களுக்கு அசைவ விருந்தை உபசரித்தனா்.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில் நல்லசேவி வகையறா குல தெய்வ பங்காளிகள் ஒன்றிணைந்து ஐயனாரப்பன், செல்லியம்மன், கருப்பனாா், முனியப்பன், பெரியாண்டிச்சி சுவாமிகளுக்கு முப்பூஜை வழிபாடு நடத்தினா். இந்த வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT