சேலம்

பூச்சிக்கொல்லி ஆலை அனுமதியை ரத்து செய்ய தீா்மானம் நிறைவேற்றம்

DIN

தம்மம்பட்டி அருகே மண்மலை ஊராட்சி, மொடக்குப்பட்டியில் பூச்சிக்கொல்லி ஆலைக்குரிய அனுமதியை ரத்து செய்யக் கோரி, மண்மலை கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மண்மலை ஊராட்சிக்குள்பட்ட மொடக்குப்பட்டியில், வேப்பங்கொட்டை அரவை ஆலை எனக் கூறி பூச்சிக்கொல்லி ஆலை கட்டுமானப் பணியை முடித்துள்ளனா். இதை அறிந்த அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடந்த ஒருமாதமாக அந்த ஆலையின் அனுமதியை ரத்து செய்யக் கோரி தொடா் போராட்டம் நடத்தியும், ஆட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் வருகின்றனா்.

இதனையடுத்து, அடுத்தகட்ட முயற்சியாக மொடக்குப்பட்டியில் நடைபெற்ற மண்மலை கிராம சபைக் கூட்டத்தில், பூச்சிக்கொல்லி ஆலையின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT