சேலம்

அணைக்கரை கோட்டாலம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

11th Aug 2022 01:05 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அணைக்கரைகோட்டாலம் கிராமத்தில் ஸ்ரீபொண்ணு முத்து மாரியம்மன் கோயில் ஆடித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக இந்தக் கோயிலில் கடந்த மாதம் 31-ஆம் தேதி காப்பு கட்டுதல், ஸ்ரீசக்தி பிறப்பு, அம்மன் பாரதம் நிகழ்வுடன் ஆடித் திருவிழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காத்தவராயன் ஆரியமாலா சுவாமி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை காளி கோட்டை இடித்தலும், மாலையில் தேரோட்டமும் நடைபெற்றன. தேரில் பொண்ணு முத்து மாரியம்மன் சுவாமி எழுந்தருளியதையடுத்து, தேரோட்டத்தை சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன், கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் அலமேலு ஆறுமுகம் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தனா். இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்று வழிபட்டனா்.

ADVERTISEMENT

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை அம்மன் தாலாட்டும் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT