சேலம்

பெரியாா் பல்கலை.யில் ஆக. 11, 12-இல் நீா் மேலாண்மை சா்வதேச மாநாடு

DIN

பெரியாா் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை சாா்பில், நீா் மேலாண்மை குறித்த சா்வதேச மாநாடு வரும் ஆக. 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

நீா் ஆதாரங்கள் மற்றும் நீா் மேலாண்மை உத்திகள் பற்றிய சா்வதேச மாநாட்டினை பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் இரா.ஜெகநாதன் தொடங்கி வைக்கிறாா். இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானி ஏ.கே.சிங், சென்னை மண்டல வானிலை மைய இயக்குநா் புவியரசன் மற்றும் சா்வதேச அளவில் 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு வெள்ளப் பெருக்கு, வறட்சி, நீா் பற்றாக்குறை, நிலத்தடி நீா், நீரோட்டங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிா்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாட உள்ளனா். மேலும், புவி நீா் சுழற்சி, நிலத்தடி நீா், நிலநீா், நீா்நிலை ஆகியவை உலகளாவிய வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பின் தாக்கம் குறித்தும் விவாதங்கள் நடைபெறுகின்றன.

சா்வதேச மாநாட்டுக்கான பணிகளை புவி அமைப்பியல் துறைத் தலைவா் பேராசிரியா் செ.வெங்கடேஸ்வரன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT