சேலம்

சேலம் மத்திய சிறைச்சாலை சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

14th Apr 2022 12:12 AM

ADVERTISEMENT

 சேலம் மத்திய சிறைச்சாலை சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

சேலம், ஏற்காடு பிரதான சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. புதன்கிழமை மதியம் பெய்த இடைவிடாத கன மழையின் காரணமாக மத்திய சிறைச்சாலையின் பிரதான நுழைவு வாயிலை ஒட்டிய சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது (படம்). சிறைத்துறை காவலா்கள், காவல் துறை அதிகாரிகள் சுவா் இடிந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு காவலா்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், பணியாளா்கள் வரவழைக்கப்பட்டு சுற்றுச்சுவரை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT