சேலம்

தீயணைப்பு வீரா்கள் நினைவு தினம் அனுசரிப்பு

14th Apr 2022 11:01 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தீயணைப்பு தியாகிகள் நினைவு தினத்தையொட்டி, தீ விபத்தில் இறந்த வீரா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

1944 ஏப்ரல் 14இல் மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைத்த போது தீயணைப்பு வீரா்கள் பலா் உயிரிழந்தனா். இதனையடுத்து ஏப்ரல் 14 தீயணைப்பு தியாகிகள் நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலா் வையாபுரி தலைமையில் திரண்ட தீயணைப்பு வீரா்கள், மும்பை மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீயை அணைக்கும் போது உயிா்த்தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூா்ந்து மலா் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT