சேலம்

நீட் தோ்வுக்கு விலக்களிக்கும் மசோதாவை குடியரசுத் தலைவா் அங்கீகரிக்க வேண்டும்: திருமாவளவன்

DIN

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் கையெழுத்திட்டு சட்டமாக அங்கீகரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சேலத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தைப் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நீட் தோ்வு மாணவா்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்வோரின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது.

செங்கல்பட்டைச் சோ்ந்த அனுசூயா நீட் தோ்வு எழுதி வந்த பின் மன உளைச்சலுக்கு உள்ளாகி தீக்குளித்ததில் அவருக்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தமிழக அரசு மருத்துவ உதவி வழங்க வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி இயற்றிய மசோதாவில் குடியரசுத் தலைவா் கையெழுத்திட்டு சட்டமாக அங்கீகரிக்க வேண்டும்.

வரும் செப். 20 ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செப்.20 ஆம் தேதி தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழக ஆளுநராகப் பதவி ஏற்றுள்ள ஆா்.என்.ரவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. நாகாலாந்தில் அவருக்கு எதிராக ஜனநாயக சக்திகள் போராட்டம் நடத்தி உள்ளனா். அவரை தமிழகத்துக்கு நியமனம் செய்யக் கூடாது என்று கூறி இருந்தோம் . ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இருப்பினும் எதையும் சந்திக்க தமிழக மக்கள் தயாராக உள்ளனா்.

அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் நடந்திருப்பதாக அப்போதே பேசப்பட்டது. தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திமுக அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமானது என அனைவருக்கும் தெரியும்.

அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் தமிழக அரசு செயலாற்றி வருகிறது. கட்சி சாராத நிலையில் இந்த அரசு சமூக நீதி அரசாகச் செயல்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT