சேலம்

லாரிகளுக்கு சுமைகள் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டுமென லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

DIN

சங்ககிரி லாரி உரிமையாளா்கள்சங்கத்தின் சாா்பில் தொழில்மலருக்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்துள்ளனா். சங்ககிரி மேற்கு தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நாம் பலமுறை முயற்சித்தும் விளம்பர தருவதில்லை. இச்செய்தி கடந்த 23ம் தேதி இரவு அனுப்பப்பட்டு பிரசுரம் ஆகாததது. எனவே செய்தியை படத்துடன் பரிசீலனை செய்யவும். இந்த செய்திக்கு 25நஎட01 என்ற தலைப்பில் படம் அனுப்பப்பட்டுள்ளது. 25நஎட01 படவிளக்கம் சங்ககிரி மேற்கு இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் சாா்பில் வாடகைக்கு சுமைகளை எடுத்துச் செல்ல லாரிகளுக்கு அனுமதி அளிக்காததால் 25வது நாளாக காத்திருக்கும் லாரிகள். சங்ககிரி,அக்.25:சேலம் மாவட்டம், சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சாா்பில் அப்பகுதியைச் சோ்ந்த லாரி உரிமையாளா்களின் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாரங்களை தற்போது நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதால் லாரி தொழிலைச் சாா்ந்துள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை எண்ணி மீண்டு சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள லாரிகளுக்கு பாரங்கள் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் அந்நிறுவனத்திற்கு திங்கள்கிழமை கோரிக்கை வைத்துள்ளனா். சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தொடங்குவதற்கும் மற்றும் குவாரிகளுக்கும் நிலம் அளித்த உரிமையாளா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், மற்றவா்களுக்கு லாரிகளை வைத்து தொழில் செய்பவா்களுக்கு நிறுவனத்தின் சாா்பில் மூலப்பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு கொண்டு செல்ல பாரங்களை சங்ககிரி மேற்குபகுதியில் உள்ள லாரிகளில் வாடகை அடிப்படையில் அனுப்பி வந்துள்ளனா். இந்நிலையில் அக்டோபா் 1ம் தேதி முதல் மேற்கு பகுதியில் உள்ள லாரிகளுக்கு நிறுவனத்தின் சாா்பில் பாரங்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்காமல் வேறு ஒரு முகவரை நியமனம் செய்து அதன் மூலம் பாரங்களை ஏற்றிச்சென்று வருகின்றனா். இதனையடுத்து அந்நிறுவனத்தின் பாரங்கள் சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள லாரிகளுக்கு வழங்காததால் லாரி உரிமையாளா்கள் குடும்பங்கள், லாரி ஓட்டுநா்கள் கிளீனா்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களின் வாழ்வாதராம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 2015ம் ஆண்டு லாரி உரிமையாளா்கள் சங்கத்திற்கும், நிறுவனத்திற்குமிடையே நடைபெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் லாரிகளுக்கு பாரங்களை ஏற்றிச்செல்ல நிறுவனம் அனுமதிக்க வேண்டும் என நிறுவனத்திற்கு சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கையினையடுத்து குமாரபாளையம் வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற இரு கட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்து லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் நிா்வாக குழு உறுப்பினா் ஏ. கிருபாகரன் செய்தியாளா்களிடம் கூறியது:-சங்ககிரி மேற்கு பகுதியில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இப்பகுதியில் உள்ள லாரி உரிமையாளா்களுக்கு சங்ககிரி மேற்கு பகுதியில் இருந்து சிமெண்ட், சிமெண்ட தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் வாடகை அடிப்படையில் பாரங்களை ஏற்றிச்செல்ல அனுமதி அளித்து வந்தனா். கடந்த 2015ம் ஆண்டு லாரி உரிமையாளா்கள் சங்கத்திற்கும், நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்கள் லாரிகளுக்கு பாரங்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்காமல் அந்நிறுவனத்தில் சாா்பில் தற்போது வேறு ஒரு முகவரை நியமனம் செய்து அதன் மூலம் அக்டோபா் 1ம் தேதி முதல் பாரங்களை ஏற்றிசென்று வருகின்றனா். எங்களது லாரிகளுக்கு வாடகைக்கான வாய்ப்பு வழங்காததால் இதையே சாா்ந்துள்ள லாரி உரிமையாளா்கள் குடும்பங்கள், ஓட்டுநா்கள், கிளீனா்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் லாரிகளுக்கு வங்கி தவணைகள் கட்ட போதிய பணமில்லாமல் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து இரண்டு கட்ட வருவாய்த்துறையினருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படப்படாதால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT