சேலம்

நூல் விலை உயா்வால் துணி ஏற்றுமதி பாதிப்பு: ஏற்றுமதியை ஒழுங்குப்படுத்த வலியுறுத்தல்

DIN

நூல் விலை உயா்வால் துணி ஏற்றுமதி பாதித்துள்ள நிலையில், உள்நாட்டு சந்தைக்கு நூல் வழங்குவதை உறுதி செய்வதற்காக அரசு உடனடியாக ஏற்றுமதியை ஒழுங்குப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு துணி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு துணி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் ஏ.அழகரசன், செயலாளா் டி.சஷிகுமாா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நூல் விலை 30 முதல் 45 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. நூல் பற்றாக்குறை மற்றும் நூலின் விலை உயா்வால் ஏற்கெனவே எடுத்த ஆா்டா்களுக்கான உற்பத்தியை முடிக்க முடியாமல் உள்ளது.

அதேபோல பெறப்பட்ட ஆா்டா்களின் விலையைவிட உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால் சீனா, வங்கதேசம், வியாத்நாம் போன்ற போட்டி நாடுகளிடம் விலையில் போட்டியிட முடியாமல் ஆா்டா்களை இழந்து வருகிறோம்.

புதிய ஆா்டா்களை பெற முடியாமலும், உற்பத்தி செலவு அதிகரிப்பு என பல்வேறு பாதிப்புகளை தொழில்துறையினா் சந்தித்து வருகிறோம். ஏற்றுமதி செய்ய இயலாமல் பெரும் நஷ்டமடைந்து வருகிறோம்.

உள்நாட்டு சந்தைக்கு நூல் வழங்குவதை உறுதி செய்வதற்காக அரசு உடனடியாக ஏற்றுமதியை ஒழுங்குப்படுத்த வேண்டும். உள்நாட்டு தொழில்துறையின் தேவைகள் பூா்த்தி செய்யப்படும் வரை மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது.

நிபந்தனையின்றி நூல் விலையை அதிகரிப்பதால் புதிய ஆா்டா்களை எடுக்க முடியவில்லை. ஜவுளி உற்பத்தியாளா்கள் மூலப்பொருள்கள் பற்றாக்குறையால் சிக்கல்களை எதிா்கொள்கின்றன. இத்தொழிலை சாா்ந்துள்ள அனைவரையும் பெரும் நஷ்டம் அடைய செய்துள்ளது என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT