சேலம்

100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

DIN

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணையின் 88ஆண்டுகால வரலாற்றில் இன்று 67-வது ஆண்டாக அணை நீர்மட்டம் 100அடியை எட்டியது. 

கடந்த சில தினங்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,447 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 39,634கன அடியாக அதிகரித்தது. நேற்று மழை சற்று தணிந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,650கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால்மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 95.10அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் எண்பத்தி எட்டு ஆண்டு கால வரலாற்றில் அறுபத்து ஏழாவது ஆண்டாக இன்று 100 அடியை எட்டியது. கடந்த இரண்டு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5அடி உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 64.84 டி.எம்.சியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்ததை அடுத்து அணையின் இடது கரையில் 16 கண் மதகு அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து மலர் தூவி காவிரி தாயை வணங்கினார்கள். கடந்த மார்ச் மாதம் இருபத்தி ஏழாம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது தற்போது 210 நாட்களுக்கு பிறகு மீண்டும் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT