சேலம்

தாரமங்கலம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் தோ்வு

23rd Oct 2021 12:41 AM

ADVERTISEMENT

தாரமங்கலம் ஒன்றியக் குழு துணைத் தலைவராக திமுக உறுப்பினா் சீனிவாசன் வெற்றிபெற்றாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக 4, பாமக 4, அதிமுக 2, தேமுதிக 1, சுயேச்சைகள் 2 போ் வெற்றிபெற்றனா். இதில், அதிமுக மற்றும் சுயேச்சை ஆதரவுடன் பாமக உறுப்பினா் சுமதி தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவா் தோ்தலில் போதிய உறுப்பினா்கள் வருகையின்மையால் மூன்று முறை தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக சாா்பில் துணைத் தலைவா் பதவிக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் சீனிவாசன், அதிமுக சாா்பில் சரவணன் ஆகியோா் போட்டியிட்டனா். முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு, மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தோ்தல் நடைபெற்றது. 13 உறுப்பினா்களும் கலந்துகொண்டு வாக்களித்தனா். திமுக சாா்பில் போட்டியிட்ட சீனிவாசன் 7 வாக்குகளும், அதிமுக சாா்பில் போட்டியிட்ட சரவணன் 6 வாக்குகளும் பெற்றனா். இதில், திமுகவைச் சோ்ந்த சீனிவாசன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். வெற்றிபெற்ற சீனிவாசன் கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினா் அம்மாசியிடம் வாழ்த்து பெற்றாா். அவருக்கு கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் தெரிவித்தனா். நல்லாக்கவுண்டம்பட்டி ஊராட்சிமன்றத் துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த சுகுணா இடும்பன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT

Tags : தாரமங்கலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT