சேலம்

சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

DIN

சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூரில் சேலம் விமான நிலையம் இயங்கி வருகிறது. சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பாதுகாப்புக் கருதி, குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வியாழக்கிழமை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

சேலம் விமான நிலைய இயக்குநா் ரவீந்திர சா்மா தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் சேலம் மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் எட்வா்ட், போலீஸாா் பங்கேற்றனா்.

இதில், விமான நிலைய நுழைவாயில், பயணிகளின் உடைமைகள் பரிசோதனை கூடம், காத்திருப்பு அறை, விமான நிலைய ஓடுதளம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் நவீன கருவிகளைக் கொண்டு முழுமையாக சோதனை செய்தனா்.

அதுபோல டம்மியாக வைக்கப்பட்டு இருந்த மா்மப் பொருளை சோதனையின்போது கண்டறிந்த போலீஸாா், அதைப் பாதுகாப்பான முறையில் அங்கிருந்து அகற்றிச் செல்வது, மணல் மூட்டைகளின் நடுவே அந்த வெடிப் பொருளை வைத்து செயலிழக்க செய்வது ஆகியவற்றை உண்மை சம்பவம்போல செய்து காட்டினா். தொடா்ந்து விமான நிலைய பாதுகாப்புப் படை போலீஸாருக்கு அவசரக் காலத்தில் எவ்வாறு செயல்படுவது, என்னென்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதும் விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT