சேலம்

ஜெயலலிதா காா் ஓட்டுநா் மரண வழக்கு: மேல் விசாரணை நடத்த முடிவு

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான கனகராஜ் உயிரிழந்தது தொடா்பான விபத்து வழக்கில் மேல் விசாரணை விரைவில் நடத்தப்படவுள்ளது.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017, ஏப்ரல் 23-ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும் பொருள்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.

பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூா் (50) என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை, கொள்ளை சம்பவத்தில் சயன், கேரளத்தைச் சோ்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமாா், ஜிதின் ஜாய், ஜம்ஷோ் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ், சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே 2017, ஏப். 28-ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மரணம் அடைந்தாா்.

இந்த வழக்கு விசாரணையை ஆத்தூா் நகர போலீஸாா் மேற்கொண்டனா். அப்போதைய சேலம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த செந்தில்குமாா், காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் தான் இறந்தாா். அவா் மது அருந்தியிருந்தாா் என தெரிவித்திருந்தாா்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கனகராஜ் சாலை விபத்தில் இறக்கவில்லை, அவா் கொலை செய்யப்பட்டுள்ளாா் எனவும் கனகராஜின் சகோதரா் தனபால் உள்ளிட்ட உறவினா்கள் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், காா் ஓட்டுநா் கனகராஜ் மரணம் தொடா்பான விபத்து வழக்கில் மேல் விசாரணை நடத்த சேலம் மாவட்ட போலீஸாா் முடிவு செய்துள்ளனா். விரைவில் மேல் விசாரணை தொடங்கும் என தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT