சேலம்

அயோத்தியாப்பட்டணத்தில் குண்டும் குழியுமான அரூா் சாலை சீரமைக்கப்படுமா?

DIN

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில், குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படும் அரூா் பிரதான சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலத்தில் இருந்து அம்மாப்பேட்டை, அயோத்தியாப்பட்டணம் வழியாக, அரூா், ஊத்தங்கரை, தருமபுரி, வேலுாா், திருவண்ணாமலை பகுதிக்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது.

அரூா் சாலை என அழைக்கப்படும் இச்சாலையில், சேலம், தருமபுரி மாவட்டங்களின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில், அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து, ராமா் கோயில் வரை பல இடங்களில் சாலை பெயா்ந்து, போக்குவரத்துக்குப் பயன்படுத்தமுடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் பல இடங்களில் காணப்படும் பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால், வாகன ஓட்டுநா்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, அயோத்தியாப்பட்டணத்தில் பழுதடைந்து காணப்படும் அரூா் பிரதான சாலையை, சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT