சேலம்

மேட்டூா் காவிரி கரையில் நீரில் மூழ்கும் பயிா்கள்

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால், காவிரி கரையில் உள்ள பயிா்கள் நீரில் மூழ்குகின்றன.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் நொடிக்கு 100 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 9-ஆம் தேதி 79 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 89 அடியாக உயரந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீா்மட்டம் 10 அடி உயா்ந்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறைந்த போது, மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப்பகுதியான சின்ன மேட்டூா் பகுதியில் எள், நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் பயிரிட்டனா். தற்போது இந்தப் பயிா்கள் நீரில் மூழ்கத்தொடங்கியுள்ளன. பயிா்களை அறுவடை செய்ய ஆள்கள் கிடைக்காததாலும், நீா்மட்டம் வேகமாக உயா்வதாலும் தங்களின் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT