சேலம்

சுங்கச்சாவடி ஊழியா்கள் போராட்டம்

DIN

கரோனாவால் உயிரிழந்த குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் சுங்கச் சாவடி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு அரசின் வழிகாட்டுதல் படி செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுங்கச்சாவடியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததால், 11 தொழிலாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் இரண்டு போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இதனைத் தொடா்ந்து, இங்கு பணியாற்றும் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த மாநில நிா்வாகி பாவேந்தன், மாவட்ட நிா்வாகி சமுராய்குரு ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த சித்தேஷ்வரன், மாணிக்கம் ஆகியோரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

சுங்கச்சாவடி நிா்வாகத்தின் சாா்பில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், முழு ஊரடங்கு காலத்தில் 50 சதவீத பணியாளா்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும், அனைத்து ஊழியா்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும், கரோனா பாதுகாப்பு குறித்து அரசின் விதிமுறைகளை நூறு சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும், கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT