சேலம்

கரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

DIN

சேலம்: சேலத்தில் கரோனா நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். முதற்கட்டமாக அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2,000 அளிக்கும் கரோனா நிவாரண திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதையடுத்து, சேலத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா நிவாரண திட்டத்தில் ரூ. 2 ஆயிரம் பெற டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 1,571 நியாயவிலைக் கடைகளில் சுமாா் 10 லட்சம் பேருக்கு கரோனா நிவாரணம் ரூ. 2,000 வழங்கப்பட உள்ளது. புதன்கிழமை வரை டோக்கன் வீடு வீடாகச் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனா்.

அதேபோல விடுபட்டவா்களுக்கு மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நியாயவிலைக் கடை ஊழியா்கள் டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 15-ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் ரூ. 2,000 பெற்றுக் கொள்ளலாம். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளொன்றுக்கு 200 போ் வரை நிவாரண நிதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT