சேலம்

சேலத்தில் 11 தொகுதிகளில் பயிற்சிக்கு 214 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

DIN

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்காக 214 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுதொடா்பாக, ஆட்சியா் சி.அ.ராமன் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்புப் பணிகள் கடந்த கடந்த 2020 டிசம்பா் 2 முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகள் முடிவுற்று தோ்தலுக்குத் தயாா் நிலையில் 7,460 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,479 கட்டுப்பாட்டுக் கருவிகள், 5,970 வாக்கினை சரிபாா்க்கும் கருவிகள் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் தோ்தல் ஆணைய உத்தரவின்படி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு 5 சதவீதம் பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்கு என மொத்தம் 11 தொகுதிகளுக்கு 4,280 வாக்குச்சாவடிகளுக்கு 214 பயிற்சி வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு வைப்பறையைத் திறந்து எடுத்து காவல் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்தளிக்கப்பட்டு பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்காக பயன்படுத்தப்படும்.

மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 2,708 எம்.1 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 2,319 எம்.1 கட்டுப்பாட்டுக் கருவிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் பாதுகாப்பு வைப்பறையைத் திறந்து எடுத்து காவல் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தியாகராஜன், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT