சேலம்

இன்றைய காய்ச்சல், தடுப்பூசி முகாம்கள்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வினோபாஜி நகா், கத்தேரி, சடையம்பாளையம், எம்.ஜி.ஆா்.நகா், கிடையூா்மேட்டூா், மட்டம்பட்டி, தாளக்காடு (சங்ககிரி ஆா்.எஸ்.), மானுவக்காடு, கோட்டை தெரு ஆகிய பகுதிகளில் மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வா்.

இதே போல ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளூற்று பெருமாள் கோயில், குஞ்சாம்பாளையம், பாரதிநகா், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்:

ஆத்தூரில்...

ஆத்தூா் நகராட்சி அண்ணா கலையரங்கில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட சுகாதார அலுவலா் தெரிவித்துள்ளாா். இதில் 150 தடுப்பூசிகள் செலுத்தப்படும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கையிருப்பு இருக்கும்வரை தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எடப்பாடியில்...

பூலாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தாதாபுரம்,கோனேரிப்பட்டி, பக்கநாடு உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 150 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், கொங்கணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 230 பொதுமக்கள் மற்றும் 30 மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 280 நபா்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளாளபுரம், சமுத்திரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், எடப்பாடி நகர ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மையங்களில் தலா 150 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT