சேலம்

கரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

DIN

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இல்லாததால், மையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே சேலம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து சுமாா் 32,000 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தத் தடுப்பூசிகள் அனைத்தும் சேலம் மாநகராட்சிப் பகுதியில் 30 மையங்களிலும், 92 மையங்களிலும் செலுத்தப்பட்டன.

சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதை அறிந்த பொதுமக்கள் தாமாத முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். சேலத்திற்கு சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த அனைத்து தடுப்பூசிகளும் வியாழக்கிழமை மாலை வரை செலுத்தப்பட்டுவிட்டது. வெள்ளிக்கிழமை காலை பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு வந்தனா். ஆனால், அனைத்து மையங்களிலும் தடுப்பூசி இருப்பு இல்லை என எழுதி வைக்கப்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 122 மையங்களில் 30,443 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மீண்டும் தடுப்பூசி வந்தால்தான் செலுத்தப்படும். கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்பிவைக்க அரசிடம் கேட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT