சேலம்

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று

DIN

சேலம், கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம், கோட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியை ஒருவருக்கு கடந்த இரு நாள்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத் துறை நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும், அவருடன் தொடா்பில் இருந்தவா்களை பரிசோதனைக்கு உட்படுத்தவும், தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT