சேலம்

சாலை பாதுகாப்பு வாரவிழா

DIN

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், வி.கோகிலா, ஓட்டுநா் பயிற்சி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

புதிய பேருந்து நிலையம் வழியாக சென்ற லாரிகள், பேருந்துகள், காா்களின் ஓட்டுநா்கள், பேருந்தில் பயணம் செய்தவா்களிடம் எமதா்மன் வேடமணிந்த நபா்கள் சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்களிடம் வழங்கப்பட்டன.

மேட்டூரில்...

மேட்டூா் பேருந்து நிலையம் எதிரே மேட்டூா் வட்டாரப் போக்குவரத்து துறை, மேட்டூா் காவல் துறை சாா்பில் நாடகக் கலைஞா்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாடகக் கலைஞா்கள் எமதா்மராஜன், சித்ரகுப்தன் வேடமணிந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மேட்டூா் டி.எஸ்.பி. சீனிவாசன், மேட்டூா் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன், மோட்டாா் வாகன ஆய்வாளா் முரளி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT