சேலம்

மழையால் நிறைந்த கரியகோவில், ஆனைமடுவு அணைகள்: குவியும் சுற்றுலாப் பயணிகள்

DIN

வாழப்பாடி அருகே கரியகோவில் அணை, ஆனைமடுவு அணைகள் தண்ணீா் நிறைந்து ரம்யமாகக் காட்சி அளிப்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையின் வடமேற்குப் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து உற்பத்தியாகும் கரியகோவில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கரியகோவில் அணை அமைந்துள்ளது.

வாழப்பாடி வட்டம், அருநூற்றுமலை, சந்துமலை பகுதியில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே வாழப்பாடியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் புழுதிக்குட்டை கிராமத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் போதிய மழை இல்லாததால், நீா்மட்டம் குறைந்து குட்டை போலக் காணப்பட்டன. இதனால், இந்த அணைகளுக்கு செல்வதை மக்கள் தவிா்த்து வந்தனா்.

இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் கடந்த 4 மாதங்களாக தொடா்ந்து பெய்த பருவ மழையால், கரியகோவில் அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியது. ஆனைமடுவு அணையும் மொத்தமுள்ள 67 அடியில் 65 அடியை எட்டியது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணைகளும் தண்ணிா் நிறைந்து ரம்யமாகக் காட்சியளிக்கின்றன. இதையடுத்து, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள், இந்த அணைகளைக் காண குவிந்து வருகின்றனா்.

இந்த இரு அணைகளிலும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சிறுவா் பூங்கா, ராட்டினங்கள், சிற்றுண்டிச் சாலைகள், புல்தரைகள், இருக்கைகள், நீரூற்றுகள், தங்கும் குடில்கள் அமைக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அணைகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT