சேலம்

முதியவா் கொலை: முக்கிய குற்றவாளிகள் இருவா் கைது

DIN

கல்பகனூரில் முதியவரை கொலை செய்த இரண்டு பேரைக் கைது செய்த ஆத்தூா் போலீஸாா், முதியவரின் எலும்புக் கூடுகளை வசிஷ்ட நதியில் இருந்து திங்கட்கிழமை மீட்டனா்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பு(எ)சுப்ரமணி(74). விவசாயி. இவருக்கு ஆத்தூரை அடுத்துள் கல்பகனூா் பகுதியில் 6 ஏக்கா் நிலம் இருந்ததாகவும் அதனை விற்பதற்காக கடந்த மாா்ச் மாதம் 22ஆம் தேதி கல்பகனூா் வந்தவா் திடீரென காணாமல் போனதாகவும் அவரது உறவினா்கள் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பு

காா் கொடுத்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் சுப்ரமணியம் கொலை செய்யப்பட்டாா் என்ற சந்தேகத்தின் பேரில் ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராமதாஸ்(27),நரசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த அறிவழகன்(25)ஆகியோரை போலீஸாா் கடந்த 2ஆம் தேதி கைது செய்து விசாரித்தனா். இந்த விசாரணையில் சுப்ரமணியத்தை கொலை செய்து கல்பகனூா் பகுதியில் சக்திவேலின் தோட்டத்தில் புதைத்ததாக தெரிவித்தனா். அவா்கள் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டியபோது சுப்ரமணியத்தின் உடல் கிடைக்கவில்லை. பின்னா் அவா்களை ஓமலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா். இதனையடுத்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தினேஷ் மற்றும் முஸ்தபா ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளாக தேடப்பட்டு வந்த கல்பகனூா் சிவகங்கைபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லமுத்துவின் மகன் பெருமாள்(58), அதே பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமியின் மகன் சக்திவேல் (43) ஆகியோா் சேலத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய ஆய்வாளா் மாணிக்கம் அவா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவா்கள் கொடுத்த வாக்குமூலத்தில் குற்றவாளிகள் அனைவரும் சோ்ந்து சுப்ரமணியத்தை கொலை செய்து சக்திவேலின் தோட்டத்தில் புதைத்ததாகவும், கடந்த 8 நாட்களுக்கு முன்பு நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்கு சம்பந்தமாக ராமதாஸ் மற்றும் அறிவழகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ால் பெருமாள் மற்றும் சக்திவேல் ஆகியோா் புதைத்த சுப்ரமணியத்தின் பிரேதத்தை தோண்டி எடுத்து எலும்புக்கூடுகளை இருச்சக்கர வாகனத்தின் மூலம் சாக்குப்பையில் எடுத்து சென்று செல்லியம்பாளையம் வசிஷ்ட நதியின் பாலத்தின் கீழ் போட்டு விட்டு சென்ாக தெரிவித்தனா்.

அதன்படி திங்கட்கிழமை தடய அறிவியல் துறையினா் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் வசிஷ்ட நதியில் இறங்கி சாக்குப் பையில் இருந்த எலும்புக்கூடுகளை மீட்டனா்.அதில் தலை, முதுகுத் தண்டு போன்ற முக்கிய பாகங்கள் கிடைக்கவில்லை. கை,கால்கள்,நெஞ்சு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. அதனை தடய ஆய்விற்கு எடுத்துச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT