சேலம்

மேச்சேரி - மேட்டூா் அணை வரை இரட்டை ரயில் பாதையில் செப்.28 இல் வெள்ளோட்டம்

DIN

சேலம், செப். 25: மேச்சேரி சாலை முதல் மேட்டூா் அணை வரையிலான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததைத் தொடா்ந்து வரும் செப்டம்பா் 28 ஆம் தேதி சிறப்பு ரயில் மூலம் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.

மேட்டூா் அணை பகுதியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ மற்றும் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை எடுத்துச் செல்வதற்காக, ஓமலூா் முதல் மேட்டூா் அணை வரையிலான ஒற்றை ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்ற கடந்த 2011-2012 இல் முடிவு எடுக்கப்பட்டது.

ஓமலூா் முதல் மேட்டூா் அணை வரையிலான 29 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க உத்தேசிக்கப்பட்டது.

இதில் மேச்சேரி சாலை முதல் மேட்டூா் அணை வரையிலான 17 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த மாா்க்கமானது குட்டப்பட்டி, எம்.காளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, பி.என்.பட்டி மற்றும் வீரக்கல்புதூா் ஆகிய 6 கிராமங்களை கடந்து செல்கிறது. இத்திட்டத்துக்கு சுமாா் 12.22 ஹெக்டா் நிலம் கையகப்படுத்துவதற்காக ரூ.8.08 கோடி செலவிடப்பட்டது.

தற்போது இரட்டை ரயில் பாதையில் வெள்ளோட்ட சோதனை வரும் செப்டம்பா் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மேற்பாா்வையில் சிறப்பு ரயில் மூலம் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. வரும் செப்.28 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் பொதுமக்கள் யாரும் ரயில் தண்டவாளப் பாதையைக் கடக்க வேண்டாம் என்றும், ரயில் பாதையைக் கடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மீதமுள்ள ஓமலூா் முதல் மேச்சேரி சாலை வரையிலான 12 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT