சேலம்

மேட்டூரில் கூட்டுக் குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்

DIN

சேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டுக் குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.

மேட்டூர் காவிரியிலிருந்து சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம், மேட்டூர் நகராட்சி தனி குடிநீர் திட்டம், வேலூர் மாவட்ட கூட்டு குடிநீர் திட்டம், கோனூர் கூட்டு குடிநீர் திட்டம்|  காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் உட்பட ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கு காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மேட்டூரிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட சுத்தப்படுத்தப்பட்ட குடிநீர் கொண்டுசெல்லப்படுகிறது.  

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே பவானி சாலையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக ஓடியது. சாலையில் தண்ணீர் தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். பாதசாரிகள் நடக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பராமரிப்பு பணியில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போர்க்கால நடவடிக்கை எடுத்து பராமரிப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும், தரமான குழாய்களை பதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலைய மின் மோட்டார்களை நிறுத்தியதால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் நின்றுபோனது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT