சேலம்

சேலத்தில் 295 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் 295 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில், மாவட்டத்தில் 295 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியாகி உள்ளது.

சேலம் மாநகராட்சியில் 156 போ், எடப்பாடி-3, எடப்பாடி நகராட்சி- 1, வீரபாண்டி- 17, ஓமலூா்- 9, சங்ககிரி- 6, நங்கவள்ளி- 7, காடையம்பட்டி- 6, தாரமங்கலம்- 9, கொங்கணாபுரம் -1, மகுடஞ்சாவடி- 3, மேட்டூா் நகராட்சி -5, ஆத்தூா்- 4, ஆத்தூா் நகராட்சி- 4, நரசிங்கபுரம்- 1, பனமரத்துப்பட்டி- 5, வாழப்பாடி- 4, கெங்கவல்லி -6, பெத்தநாயக்கன்பாளையம்- 2, தலைவாசல்- 8, வாழவந்தி- 3, அயோத்தியாப்பட்டணம்- 10 என மாவட்டத்தில் 288 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி-2, ஈரோடு -1, கிருஷ்ணகிரி- 1, நாமக்கல்- 1, காஞ்சிபுரம்- 1, கள்ளக்குறிச்சி -1) 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஒருவா் பலி...

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டிருந்த ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 26 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 16,970 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அவா்களில் 14,266 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,260 போ் சிகிச்சையில் உள்ளனா்; 264 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT