சேலம்

சேலம் உருக்காலை முன்பு தொழிலாளா்கள்3-வது நாளாகப் போராட்டம்

DIN

கரோனா பாதிப்பால் உயிரிழந்த உருக்காலை தொழிலாளியின் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க வலியுறுத்தி, மூன்றாவது நாளாகத் தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், உருக்காலை பணிமனையில் வெப்பப் பிரிவில் முதுநிலை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்த கண்ணன், கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டு இறந்தாா்.

இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளி கண்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு, இரும்பாலையில் பணி வழங்க வலியுறுத்தி, சேலம் உருக்காலை தொழிற்சங்கத்தினா் நுழைவாயில் முன்பு அமா்ந்து சனிக்கிழமை இரவு முதல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஊழியா்களின் போராட்டம் காரணமாக இரும்பாலை வளாகத்தின் உள்ளே இருந்து யாரும் வெளியே வர முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, உருக்காலை நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT