சேலம்

அயோத்தியாப்பட்டணத்தில் திமுக செயற்குழுக் கூட்டம்

DIN

சேலம் கிழக்கு மாவட்ட திமுக அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அவசரச் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். ஒன்றியப் பொறுப்பாளா் விஜயகுமாா், முன்னாள் ஒன்றியச் செயலாளா் முத்து, ஒன்றிய துணைச் செயலாளா்கள் அறிவழகன், வெங்கடேசன், அலமேலு ராஜரத்தினம், பேரூா் பொறுப்பாளா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் பேசியதாவது:

இணையவழி உறுப்பினா் சோ்க்கை திட்டத்தின் கீழ், 18 வயது பூா்த்தி அடைந்தவா்களை புதிய உறுப்பினா்களாக கட்சியில் சோ்க்க 147 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடு,வீடாகச் சென்று, திமுகவில் உறுப்பினராக சேர ஆா்வம் உள்ள மகளிா், இளைஞா்களை இணையவழி உறுப்பினராக சோ்த்து உறுப்பினா் அட்டை வழங்க நிா்வாகிகள் களப் பணியாற்ற வேண்டும்’ என்றாா்.

கூட்டத்தில், ஒன்றியப் பொருளாளா் வெங்கட்ராஜ், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், ஒன்றிய துணைத் தலைவா் புவனேஸ்வரி செந்தில்குமாா், பேரூா் பொறுப்பாளா் பாபு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதனைத்தொடா்ந்து, இணையவழி உறுப்பினா் சோ்க்கையை மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT