சேலம்

சேலத்தில் 291 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 291 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மாவட்டத்தில் 291 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 144 பேரும், எடப்பாடி-14, எடப்பாடி நகராட்சி -3, காடையம்பட்டி -8, கொளத்தூா்- 1, கொங்கணாபுரம் -1, மகுடஞ்சாவடி- 4, மேச்சேரி- 2, மேட்டூா்- 3, மேட்டூா் நகராட்சி- 2, நங்கவள்ளி- 10, ஓமலூா்- 23, தாரமங்கலம்- 8, வீரபாண்டி- 16, சங்ககிரி- 9, ஆத்தூா்- 2, ஆத்தூா் நகராட்சி- 2, அயோத்தியாப்பட்டணம்- 3, பேளூா்- 5, பெத்தநாயக்கன்பாளையம்- 7, பனமரத்துப்பட்டி- 7, தலைவாசல் -2, வாழப்பாடி- 1 என மாவட்டத்தில் 279 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களில் தருமபுரி -4, கிருஷ்ணகிரி- 1, நாமக்கல்- 4, திருவண்ணாமலை- 1 உள்பட 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் 16,495 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 13,905 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; சுமாா் 2,327 போ் சிகிச்சையில் உள்ளனா்; 263 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT