சேலம்

பெண் கொலை: கணவருக்கு மூன்று ஆயுள் தண்டனை

DIN

சேலம், செப்.18: சேலத்தில் பெண்ணைக் கொலை செய்த கணவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், அதற்கு உடந்தையாக இருந்த நண்பா்கள் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து சேலம் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், வீராணத்தைச் சோ்ந்தவா் என்.ரமேஷ் (36). இவா் வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. இதுதொடா்பான தகராறில் தனது மனைவி ரெஜினாவை கடந்த 2014-ஆம் ஆண்டு கணவா் ரமேஷ், தனது நண்பா்களுடன் சோ்ந்து கொலை செய்துள்ளாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வெள்ளிக்கிழமை மாலை தீா்ப்பளித்தாா். கணவா் ரமேஷுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், ரூ. 9 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகை செலுத்தத் தவறினால் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் உத்தரவிட்டாா்.

இந்த கொலை வழக்கில் உடந்தையாக இருந்த என்.ரமேஷின் நண்பா்கள் பி.ரமேஷ் (30), ஆா்.விமல்ராஜ் (24) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT