சேலம்

சேலத்தில் 288 பேருக்கு கரோனா

DIN

சேலம், செப்.18: சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 288 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 288 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் மாநகராட்சி- 187 போ், எடப்பாடி- 4, எடப்பாடி நகராட்சி- 6, காடையம்பட்டி- 2, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி- 5, மேச்சேரி- 4, நங்கவள்ளி- 3, ஓமலூா்- 12, தாரமங்கலம்- 4, வீரபாண்டி- 3, ஆத்தூா்- 3, அயோத்தியாப்பட்டணம்- 3, கெங்கவல்லி- 5, நரசிங்கபுரம்- 2, பனமரத்துப்பட்டி- 6, தலைவாசல்- 4, வாழப்பாடி- 7 என மாவட்டத்தில் 285 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் தருமபுரி- 1, நாமக்கல்- 2 என மொத்தம் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா்.

உத்தமசோழபுரத்தில் உள்ள கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 16 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இந்த மையத்தில் 354 போ் கரோனா சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனா். இதுவரை 286 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 15,923 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 13,387 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனா்; 2,285 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 251 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT