சேலம்

கோட்டையூா்-ஓட்டனூா் பரிசல் துறைகளை இணைக்க பாலம்: எம்.பி.க்கள் தகவல்

DIN

சேலம், தருமபுரி மாவட்டங்களை இணைக்க காவிரியின் குறுக்கே பாலம் அமைக்கப்படும் என்று தருமபுரி, சேலம் தொகுதி எம்.பி.க்கள் தெரிவித்தனா்.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் டாக்டா் டி.என்.வி.செந்தில்குமாா், சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பா.கோபால் ஆகியோா் வியாழக்கிழமை கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், கோட்டையூா் பரிசல்துறையில் காவிரியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்பகுதியில் காவிரி நீா் பச்சை நிறமாகவும் துா்நாற்றமும் வீசியது. பாறைகளில் ஊதா நிறத்தில் படிவங்கள் படிந்திருந்தன. சுமாா் ஒருமணிநேர ஆய்வுக்குப் பிறகு எம்.பி. டி.என்.வி.செந்தில்குமாா், எஸ்.ஆா்.பாா்த்திபன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டம், கோட்டையூரிலிருந்து தருமபுரி மாவட்டம், ஒட்டனூருக்கு காவிரியைக் கடந்த செல்ல சுமாா் இரண்டு கி.மீ தொலைவுதான் உள்ளது.

நெருப்பூா், ஒட்டனூா், ஏரியூா் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து சேலம் மாவட்டம், கொளத்தூா், மேட்டூா் உள்ளிட்ட பகுதிகளிக்கு பள்ளி மாணவ மாணவியரும், பொதுமக்களும் பரிசல் அல்லது படகு மூலம் காவிரியில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனா்.

வெள்ளப்பெருக்கு காலங்களில் படகு போக்குவரத்து நிறுத்தப்படும். அப்போது பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவியா் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாது. சாலைவழியாக சென்றால் சுமாா் 70 கி.மீ. தொலைவு சுற்றிதான் இப்பகுதிகளுக்கு வரமுடியும். இரு மாவட்ட மக்களும் இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா். காவிரியைக் கடந்து செல்ல பாலம் அமைத்தால் ஒகேனக்கல், பெங்களூரு செல்ல தூரம், நேரம் குறைவதோடு வாகனங்களுக்கு எரிபொருளும் மிச்சமாகும். எனவே, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி இப் பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT