சேலம்

‘ஆயுத பூஜையை முன்னிட்டு பொது இடங்களில்பூசணிக்காய் உடைப்பதைத் தவிா்க்க வேண்டும்’

DIN

ஆயுத பூஜையை முன்னிட்டு மாநகராட்சிப் பகுதிகளில் பூசணிக்காய், தேங்காய் போன்ற பொருள்களை பொது இடங்களில் உடைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் பூசணிக்காய், தேங்காய் போன்ற பொருள்களை உடைத்து பொது சுகாதாரத்திற்கும், பொது மக்களுக்கும் ஊறுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி திடக்கழிவு சேகரிப்பு வாகனங்கள் மூலம் தினசரி குப்பைகளை சேகரிக்க வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடமோ அல்லது மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

மாறாக தெருக்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் வாகனங்கள் செல்லும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திடும் வகையில், குப்பைகளைக் கொட்டுவோா் மீது பொது சுகாதார விதிகளின்படியும், திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழும் அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT