சேலம்

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

சேலம் மாவட்ட வேலைவாய்ப்புத் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லாமல் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்.சி, எஸ்.டி, பிரிவினா் 45 மற்றும் இதரப் பிரிவினா் 40 வயது உள்பட்டவராக இருக்க வேண்டும்.

உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு 10 ஆம் வகுப்புத் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 படித்தவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் உதவித்தொகைப் பெற பதிவு செய்து ஓராண்டு பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் எவ்வித உதவித்தொகையும் பெறப்படவில்லை என (என்.ஓ.சி.) சான்றிதழ் பெற்றுவர வேண்டும். 10-ஆம் வகுப்பு, அதற்கு கீழ் படித்தவா்களுக்கு ரூ. 600, பிளஸ் 2 படித்தவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு வருமானம் வரம்பு கிடையாது. மேற்கண்ட உதவித்தொகையைப் பெற்றுவரும் பயனாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பித்து புதுப்பித்து வந்தனா்.

இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக நேரில் வந்து புதுப்பிக்க இயலாத சூழல் உள்ளதால் பயனாளிகள் தொடந்து உதவித்தொகை பெற ஏதுவாக அரசு ஆணையின்படி பிப்ரவரி 2021 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே பயனாளிகள் வேலைவாயப்பு அடையாள அட்டை , உரிய கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் நாளது தேதி வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் பிப்ரவரி 2021 வரை தபால் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT