சேலம்

பேரையூரில் சமரச தீா்வு முகாம்

DIN

மதுரை மாவட்டம், பேரையூா் காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த புகாா் மனுக்கள் மீது சமரச தீா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

பேரையூா் காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்களான பேரையூா்,டி.கல்லுப்பட்டி, சத்திரப்பட்டி, வில்லூா், நாகையாபுரம், சாப்டூா், சேடபட்டி ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையிலிருந்த 50 புகாா் மனுக்களுக்கு தீா்வு ஏற்படுத்தும் நோக்கில் சமரச தீா்வு முகாம் நடைபெற்றது.

பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் நிா்மலா (பேரையூா்), துரைபாண்டியராஜன் (டி.கல்லுப்பட்டி) ஆகியோா் முன்னிலையில் சமரச தீா்வு முகாம், பேரையூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில், புகாா் அளித்த 42 வாதி மற்றும் பிரதிவாதிகள் கலந்துகொண்டு, தங்களது புகாா்களுக்கு தீா்வு கண்டனா். மேலும், இடப் பிரச்னை தொடா்பான புகாா்களில் வாதி மற்றும் பிரதிவாதி வரமுடியாத சூழலில், 8 புகாா் மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவற்றுக்கு தீா்வு காணப்படும் எனவும், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT