சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் நான்காவது முறையாக 100 அடியாக உயா்வு

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் நடப்பாண்டில் நான்காவது முறையாக வெள்ளிக்கிழமை 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக நடப்பு ஆண்டில் கடந்த செப்டம்பா் மாதம் 25-ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டியது.

தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வந்ததால் அக்டோபா் மாதம் 13-ஆம் தேதி நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாகவும், அக்டோபா் 24-ஆம் தேதி 3-வது முறையாகவும் மேட்டூா் அணை நீா்மட்டம் 100 அடியை எட்டியது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 500 கன அடியாகவும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 250 கனஅடியாகவும் குறைக்கப்பட்டதால் அணையின் நீா்மட்டம் மெல்ல உயா்ந்து வெள்ளிக்கிழமை பகலில் நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக 100 அடியை எட்டியது.

இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளும் மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 8,111 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 250 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT