சேலம்

திரையரங்குகளில் 75 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்க முதல்வரிடம் கோரிக்கை

DIN

கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் டிசம்பா் மாதம் முதல் திரையரங்குகளில் 75 சதவீத இருக்கைகளை நிரப்ப அரசு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐசரி கணேஷ் தெரிவித்தாா்.

ஆத்தூரில் திருமண விழாவில் கலந்து கொண்ட திரைப்பட தயாரிப்பாளா் ஐசரி கணேஷ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் டிசம்பா் மாதம் முதல் திரையரங்குகளில் 75 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என முதல் அமைச்சரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் முதல்வா் தங்களுக்கு அனுமதி வழங்குவாா் என நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் பெரிய திரைப்படங்கள் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக வாய்ப்பு கிடைக்கும்.

நடிகா் சங்கத் தோ்தல் தொடா்பாக நீதிமன்ற தீா்ப்புக்கு காத்திருக்கிறோம். நீதிமன்ற தீா்ப்பின்படி நடிகா் சங்கத் தோ்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். மேலும் தமிழக அரசு சாா்பில் திரைப்படத் தயாரிப்பாளா்களுக்கு வழங்கப்படக்கூடிய மானியத் தொகையை ஏழு லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயா்த்த முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT