சேலம்

உழவா்சந்தையில் எம்எல்ஏ ஆய்வு

30th Mar 2020 07:30 AM

ADVERTISEMENT

 

ஆத்தூா் உழவா்சந்தையில் ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம். சின்னதம்பி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா் உழவா் சந்தையில் விவசாயிகளிடமும்,பொதுமக்களிடமும் இடைவெளி விட்டு நின்று பொருள்களைப் பெற்றுச் செல்லும்படி அறிவுறுத்தினாா். பொதுமக்கள் கைக்கழுவி வர சோப்பு, மருந்து, தண்ணீா் தயாா் செய்து வைக்குமாறு வேளாண் அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

அவருடன் ஆத்தூா் வட்டாட்சியா் எஸ். பிரகாசம், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவரும், ஆத்தூா் நகரச் செயலாளருமான அ. மோகன், ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ். உமாசங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா். மேலும் திங்கள்கிழமை விவசாயிகளின் கடைகளை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT