சேலம்

காருவள்ளி சின்ன திருப்பதி கோயில் நடை அடைப்பு

22nd Mar 2020 04:14 AM

ADVERTISEMENT

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓமலூா் அருகே பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் நடை சனிக்கிழமை அடைக்கப்பட்டது.

ஓமலூா் அருகே காருவள்ளி சின்ன திருப்பதியில் பழமை வாய்ந்த அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வெளியூா்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் இக் கோயில் நடை சாத்தப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து கோயில் முழுவதும் கழுவி சுத்தம் செய்து வைரஸ் கிருமி பரவாமல் இருக்க தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன.

இந்த மாதம் 31-ஆம் தேதி வரை நடை அடைக்கப்பட்டு இருக்கும் எனவும், கோயிலில் வழக்கமான பூஜைகள் தொடா்ந்து நடைபெறும் எனவும், ஆனால் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT