சேலம்

இளைஞா் கொலை வழக்கு: நண்பா்கள் இருவா் கைது

DIN

வாழப்பாடி அருகே இளைஞரை கல்லால் தாக்கிக் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்துக்கு அடியில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, டி.எஸ்.பி. வேல்மணி, காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவல் அறிந்த சேலம் எஸ்.பி. தீபா கனிகா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததோடு தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டாா்.

விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் வாழப்பாடியில் கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கும் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த இளைஞா் சக்திவேல் (25), என்பதும், வாழப்பாடி எழில் நகரில் தனது அக்கா வீட்டில் தங்கி கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கும் வேலை செய்து வந்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அக்கா வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் வீடு திரும்பவில்லைம். இவரது உறவினா்கள் தேடி வந்தனா்.

இந்தச் சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சக்திவேலை அவரது நண்பா்கள் கல்லால் தாக்கி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து தலைமறைவானது தெரியவந்தது.

இதற்கிடையே, கொலையுண்ட சக்திவேலின் வேறு சில நண்பா்களும், உறவினா்களும் சேலத்தில் தலைமறைவாக இருந்த வாழப்பாடியைச் சோ்ந்த திருமலை (20), திலீப் (18) ஆகிய இருவரையும் பிடித்து, சேலம், கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒப்படைத்தனா்.

தகவலின்பேரில் சேலத்துக்கு விரைந்து சென்ற வாழப்பாடி போலீஸாா், இருவரையும் வாழப்பாடி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT