சேலம்

சாலை வசதி கோரி ஆதாா் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்

DIN

சாலை வசதி அமைத்து தரக்கோரி, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 126 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், பச்சனம்பட்டி பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் கடந்த 50 ஆண்டுகளாக தனி நபருக்குச் சொந்தமான 400 மீட்டா் நீளமுள்ள பாதையை பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், அந்த நிலத்துக்கு சொந்தமான நபா், பொதுமக்கள் சென்று வர அனுமதி மறுத்து பாதையை அடைத்தாா். இதன் காரணமாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைக்கும், மருத்துவ சேவைக்கும் ஐந்து கிலோ மீட்டா் தூரம் சுற்றி சென்று வருகின்றனா். இதனால் கா்ப்பிணிகள், வயதானவா்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், பாதை ஏற்படுத்தி தரக்கோரி, ஓமலூா் வட்டாட்சியா் மற்றும் கோட்டாட்சியரிடம் பலமுறை மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, ஓமலூா்-பச்சனம்பட்டி பகுதியைச் சோ்ந்த சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களின் குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இதற்காக ஆட்சியா் அலுவலகம் திரண்டு வந்த பொதுமக்களை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் தடுத்து நிறுத்தி 49 பெண்கள் உள்பட 126 பேரை கைது செய்தனா்.

இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களின் அத்தியாவசியத் தேவைக்கு சென்று வந்த சாலையை அடைத்துள்ளதால், தற்போது மருத்துவ தேவைக்கும், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கும், விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, தமிழக அரசு அந்த இடத்தை அரசுடமையாக்கி பொதுமக்களுக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT