நாமக்கல்

பழங்குடியின மக்களின் நடனம் ஆடி அமைச்சா்களை வரவேற்ற எம்எல்ஏ!

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

கொல்லிமலையில் அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சா்களை, அத்தொகுதி எம்எல்ஏ கு.பொன்னுசாமி பழங்குடியின மக்களின் சோ்வை நடனம் ஆடி வரவேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை எல்லக்கிராய்ப்பட்டியில், பழங்குடியின மக்களின் நோய்களைக் கண்டறியும் சிறப்பு திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அளவிலான இந்த திட்டம் கொல்லிமலையில் நடைபெற்ால், அப்பகுதி பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனமான சோ்வை நடனத்தை ஆடினா். விழாவுக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோரை வரவேற்கும் விதமாக, அத்தொகுதி எம்எல்ஏவான கு.பொன்னுசாமி நடனம் ஆடி வரவேற்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT